தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் செந்தாமரை. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த வில்லன்களை வரிசைப்படுத்தினால் பலரும் இருப்பார்கள்.

அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் செந்தாமரை. இவர் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜியுடன் மேடை நாடகங்களில் நடித்து அதன் பிறகு தான் சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் மூன்று முகம் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்திருப்பார். பல திரைப்படங்களிலும் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் கிடைத்தது.

இதனிடையே செந்தாமரையின் மனைவி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவரின் மனைவி தான் நடிகை கௌசல்யா. இவர் இப்போது பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரை அனைவரும் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் அறிந்திருப்போம்.

தற்போது இவருக்கு வயது 72. பல சீரியல்களில் அம்மா ரோலிலும் வில்லத்தனத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார். இவர் பிரபல நடிகர் செந்தாமரையின் மனைவி என்பது இன்றும் பலருக்கும் தெரியாத உண்மை. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.