பிக்பாஸ் சீசன் 6….. முதல் நாளே இளசுகளை கவர்ந்த பிரபலம்…. யார் இந்த இலங்கை அழகி?….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் நேற்று மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து பெண் போட்டியாளர்கள், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சி ஜனவரி 2023 ஆம் ஆண்டு மூன்றாவது வாரத்தில் முடிவடையும். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே கட்டாயம் இலங்கையை சேர்ந்த ஒரு போட்டியாளர் இடம் பெற்றிருப்பார்.

கடந்த சீசன்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் லாஸ்ட்லியா போட்டியாளராக வந்து களம் இறங்கிய நிலையில் தற்போது இந்த சீசனில் போட்டியாளராக இலங்கையை சேர்ந்த ஜனனி போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் ஒரு சேனலில் தொகுப்பாளராக உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இவருக்கு ரசிகர்கள் ட்விட்டரில் ஆர்மி தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அவர் என்ட்ரி கொடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.