தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.அன்மையில் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்..அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
