விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் நேற்று மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து பெண் போட்டியாளர்கள், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சி ஜனவரி 2023 ஆம் ஆண்டு மூன்றாவது வாரத்தில் முடிவடையும். Bigg Boss வீட்டிற்குள் நேற்று முதல் ஆளாகச் சென்றவர் யூடியூப் பிரபலம் ஜிபி முத்து. இவர் வீட்டிற்குள் சென்றது செம காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் . அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் அதிக எதிர்பார்ப்பும் இவர் மீது தான் ரசிகர்களுக்கு உள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் ஜிபி முத்துவிடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நகைச்சுவையாக கலாட்டா செய்துள்ளார். நடு இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது ஜிபி முத்துவை ராபர்ட் பயமுறுத்தியுள்ளார். அப்போது அளவு எடுத்து எந்திரிக்கும் ஜி பி முத்து கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
Fullll funnn ???????????????? #GPMuthu #GPMuthuArmy #biggboss6tamil #gpmuthu #KamalHaasan???? #tamil pic.twitter.com/iPPm1V8fy0
— Nithu (@nithuu_u_u) October 9, 2022