மாலத்தீவிற்கு Vacation சென்ற ராஷ்மிகா மந்தனா…. ஒரு நாள் வாடகை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?…. கேட்டா தலையே சுத்துது….!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.இதனிடையே ராஷ்மிகா தற்போது இந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்து goodbye என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் படங்களில் பிசியாக இருக்கும் ராஷ்மிகா தற்போது ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்றுள்ளார். அவருடன் விஜய் தேவரகொண்டாவும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வேலனா தீவு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல கடற்கரை ஹோட்டலில் ரஷ்மிகா மந்தனா தங்கியுள்ளார் . அந்த ஹோட்டலில் ஒரு நாள் வாடகை மட்டுமே இந்திய ரூபாய் மதிப்பில் 1.40 லட்சம் என கூறப்படுகிறது.