தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் யோகி பாபு, சரத்குமார்,பிரகாஷ்ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது.தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் நடித்து வெளியான நண்பர் திரைப்படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜயுடன் இலியானா, ஜீவா,ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமைக்காக இருந்தாலும் விஜய்யின் மாறுபட்ட நடிப்பு இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. இதனிடையே படத்தில் விஜய் நடித்த கோஸ்ட்ஷிவ் பசப்புகள் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிகர் சூர்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் சூர்யா கமிட்டாக முடியாத காரணத்தால் அதன் பிறகு விஜய் நடித்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
