விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது. தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்களை அதிக அளவு ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இந்நிலையில் 38 வயதாகும் டிடி தற்போது ஆடையை மாற்றும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
JFW ACHIEVER’S AWARD 2022 விருதை வாங்கியுள்ள டிடி வெறும் டீ சர்ட் அணிந்து விருதினை ஏந்தியபடி மாற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்து அவரை கலாய்த்து ரசிகர்கள் பலரும் வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.