தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமந்தா சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் ஐந்து கோடி அளவில் உயர்த்தி உள்ளார்.இதனிடையே சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. சமந்தாவிற்கு ஒரு பிரச்சனை மட்டும் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் சரும பிரச்சனையால் சிரமப்பட்டு வருவதாக அண்மையில் தகவல் வெளியானது.அதேசமயம் சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்ற நிலையில் அது அவரின் சருமம் தொடர்பான சிகிச்சைக்கு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்த சமந்தா சிகிச்சை முடிந்து தற்போது மும்பை திரும்பி உள்ளார். இந்நிலையில் அவரை instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள நிலையில் அதில் அவரின் முகத்தை காட்டவில்லை. அதே சமயம் அவரின் டீச்சர்ட்டில் “நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்”என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
