தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தங்கள் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தனர்.

இதுவரை இரண்டு முறை ஹனிமூன் சென்றுள்ள இவர்கள் அண்மையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை முன்னிட்டு நாத்தனார் மற்றும் மாமியார் என குடும்பத்துடன் துபாய் சென்று இருந்தால் நயன்தாரா. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வளம் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார். திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இப்படி கூறுகிறார்கள் என முதலில் அதிர்ச்சி அடைந்த பின்பு ரசிகர்கள் பின்னர் தெளிவாகினர்.

அதாவது கடந்த நவம்பர் மாதமே இருவரும் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர்களின் குழந்தைகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது இந்த விஷயம் விதிமுறைகளின் படி நடக்கவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது . இந்நிலையில் இதனை சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானிடம் இருந்து நயன்தாரா கற்றுக் கொண்டாரா என புதிய கேள்வி எழுந்துள்ளது.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடைய மூன்றாவது குழந்தை ஆபிரகாம் கானை வாடகத்தாய் மூலம் பெற்றுக்கொண்டார்.

தற்போது நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அப்போது திருமணத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகள் கூட ஷாருக்கான் கூறி இருந்ததாகவும் அதில் ஒன்றாக வாடகைத்தாய் இருக்கலாம் என்று அவர் கூறி இருக்கலாம் எனவும் இணையத்தில் செய்தி ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.