தமிழகத்தில் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும் ஒரு மாமனிதர் தான் எம்ஜிஆர். இவரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளை கிடையாது. அந்த அளவிற்கு மக்களின் மனதை கவர்ந்தவர். சினிமாவில் இவரது நடிப்பை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சினிமாவை தவிர்த்து மக்கள் சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அப்படி அரசியலில் நுழைந்த இவர், மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

தமிழகத்தில் இவரது ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஒரு பக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். இவரது பெயரை சொன்னால் யாருமே தெரியாது என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக பேசப்பட்டவர். இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. அப்படிப்பட்ட இவர் இப்போதும் இருந்திருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர்.

இதனிடையே எம்ஜிஆர் பூர்வீக வீடு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் உள்ளது.அவரது அந்த காலத்து வீட்டை சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு தற்போது விடப்பட்டுள்ளது. அங்கு எம்ஜிஆரின் தாய் தந்தை புகைப்படங்களும் உள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
