தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கிளாமரை காட்டாமல் நல்ல குடும்பப் பெண்ணாக படங்களில் நடித்து வருவதால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இதனிடையே அடிக்கடி வெளிநாட்டு பயணம் செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் கலந்து கொண்டுள்ளார். மணிகண்டன் ராஜேஷ் குறித்து அவரின் தங்கை உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், நான் என்னுடைய அண்ணன் மணிகண்டனை புஜ்ஜி என்று தான் அழைப்பேன்.

தற்போது என் அண்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி. அதே சமயம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன் என் தந்தையின் மறு உருவம் அவன் தான். கண்டிப்பாக சில நாட்கள் அவரை பிரிய நேரிடும். நான் அவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தயவுசெய்து என் சகோதரனுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள் என ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
