இந்திய அளவில் அந்த லிஸ்டில்…. இதுவரை ஒரு முறை கூட இடம்பெறாத நடிகர் விஜய்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரைதிரைப்படங்கள் வெளியாகி இந்திய வர்த்தகத்தில் பெரும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் தமிழ் திரைப்படங்களின் தலைப்புகள் அனைத்தும் சமூக வலைத்தளம் மூலமாக ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக பிரபலமாகிறது.

அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் தமிழ் திரையுலகம் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து லாபத்தை ஈட்டி உள்ளன.ஆனால் ஒரு சில திரைப்படங்கள் செலவு செய்த தொகையை கூட பெறாமல் படும் தோல்வியை தழுவுகிறது. அதில் மிக சொற்ப படங்களை வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதை அனைவரும் அறிந்திருப்போம் . அப்படியான நடிகர்கள் தங்களின் திரைப்படங்களுக்காக விருதுகள் வாங்குவது வழக்கம்தான்.

அவ்வகையில் இந்தியாவில் பிரபலமான விருதாக பார்க்கப்படுவது ஃபிலிம் பேர் விருது தான். அதனை வாங்கி உள்ள முக்கிய நடிகர்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அந்த பட்டியலில் முக்கிய நடிகராக உள்ள நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தில் ஒரு தடவை கூட ஃபிலிம்பேர் விருதை பெறவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கிறது.

  • எம்.ஜி.அர்
  • சிவாஜி
  • ஜெமினி கணேசன்
  • சிவகுமார்
  • கமல்ஹாசன்
  • ரஜினிகாந்த்
  • மோகன்
  • பாக்யராஜ்
  • விஜயகாந்த்
  • கார்த்திக்
  • சரத்குமார்
  • அஜித்குமார்
  • விக்ரம்
  • சூர்யா
  • கார்த்தி
  • தனுஷ்
  • மாதவன்
  • விஜய் சேதுபதி
  • அதர்வா