39 வயதை நெருங்கும் திரிஷா…. திருமணம் எப்போது தெரியுமா?…. முதல்முறையாக அவரே சொன்ன சீக்ரெட்….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இதனைத் தவிர இவர் நடித்துள்ள ராங்கி உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளது. இந்நிலையில் 39 வயதாகியும் தற்போது வரை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இதனிடையே அவர் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதுதான் பல வருடமாக பலருக்கும் உள்ள கேள்வி. தற்போது இது குறித்து அவரே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது, திருமணம் எப்போது என்பது எனக்கு கூட தெரியாது,நான் வாழ்க்கை முழுக்க சேர்ந்து இருக்கக்கூடிய ஒருவர் இவர்தான் என எனக்கு தோன்ற வேண்டும், திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து பெறுவதில் எனக்கு விருப்பமில்லை என த்ரிஷா வெளிப்படையாக கூறியுள்ளார்.