“நீங்க லூசு மாதிரி பேசாதீங்க”…. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல்…. மாறி மாறி சண்டை போட்ட பிரபலங்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது.

முதல் நாளே போட்டியாளர்கள் பலரும் மோதிக்கொண்டனர்.அதன்படி முதல் ப்ரோமோவில் ஜனனி மற்றும் ஆயிஷா மோதி கொண்ட நிலையில் இரண்டாவது வெளியாகியுள்ள ப்ரொமோவில் மகேஸ்வரி மற்றும் தனலட்சுமி மோதிக் கொள்ளும் வீடியோ இடம்பெற்றுள்ளது.அந்த வீடியோவில் லூசு மாதிரி கேள்வி கேக்குறாங்க என மகேஸ்வரி. தனலட்சுமி பார்த்து கேட்டதும்,உடனே தனலட்சுமி நீங்க லூசு மாதிரி பேசாதீங்க என பதிலடி கொடுத்துள்ளார். இருவரும் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.