ஜிபி முத்துவை அந்த இடத்தில் வைத்து அசிங்கப்படுத்திய மகேஸ்வரி…. அதுக்குன்னு இப்படியா?…. கடுப்பான ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது. முதல் நாளே போட்டியாளர்கள் பலரும் மோதிக்கொண்டனர்.

 

இந்நிலையில் மகேஸ்வரி பாத்ரூம் செல்ல சென்ற போது, அனைத்து பாத்ரூம்களிலும் ஆட்கள் இருந்ததால் அமுதவாணனை அழைத்துள்ளார். அப்போது அமுதவாணன் ஏண்டா இங்க வந்து கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா என கலகலப்பாக பேசினார். அதன் பிறகு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ஜிபி முத்து ஜிப் போட மறந்துவிட்டார்.

அதனை சுதாகரித்துக் கொண்டு திரும்பி நின்றபடி ஜிப் போட்டார். அதனைப் பார்த்து அமுதவாணன் ஏன் அப்படி திரும்பி நிற்கிறார் என கேட்க அவர் ஜிப் போடல அதான் திரும்பி நின்று ஜிப் போடுகிறார் என மகேஸ்வரி கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜி.பி முத்துவை அண்ணா அண்ணா என அழைத்துவிட்டு தங்கையே அவரை இப்படி அசிங்கப்படுத்தலாமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.