உண்மையிலேயே ஜிபி முத்து இப்படித்தான்…. வெளிச்சத்திற்கு வந்த சுயரூபம்…. கேமரா முன்பு பேசிய தனலட்சுமி….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது. முதல் நாளே போட்டியாளர்கள் பலரும் மோதிக்கொண்டனர்.

இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் வீட்டிற்குள் அலப்பறை செய்து வரும் ஜி பி முத்து குறித்த பல வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.தற்போது ஜி பி முத்துவின் ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ள நிலையில் அவருக்காக பல ஆர்மி குரூப் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது என்றும் அவர் நாரதர் வேலையை பார்த்து வருகிறார் என தனலட்சுமி கேமிரா முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே ஜி பி முத்துவின் செயல்பாடுகள் நாரதர் வேலையாக இருப்பதால் அவரின் டீம் நாரதர் டீம் என கூறி பலரும் கலாய்த்து வரும் நிலையில் தனலட்சுமி இப்படி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.