இந்த வயசிலும் இப்படியா?…. பிக்பாஸ் வீட்டில் அது பற்றி பேசி… பெண் போட்டியாளர்களை கதறவிட்ட ஜிபி முத்து…..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது. முதல் நாளே போட்டியாளர்கள் பலரும் மோதிக்கொண்டனர்.

இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் வீட்டிற்குள் அலப்பறை செய்து வரும் ஜி பி முத்து குறித்த பல வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.தற்போது நேற்றைய நாளில் ஜிபி முத்துவின் உள்ளாடை இன்னும் வரவில்லையே என சக பெண் போட்டியாளர்கள் முன்னிலையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இப்படி கேமரா முன்பு பேசுவது ஏன் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

https://twitter.com/trolee_/status/1580051067634532352