பிக்பாஸ் போட்டியாளர் சாந்தியின் கணவர், குழந்தைகள்…. இதுவரை பலரும் பார்த்தீடாத புகைப்படம் இதோ…..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடன கலைஞர்தான் சாந்தி.இவர் விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். இவருக்கென தனி ஒரு அடையாளத்தை கொடுத்தது மெட்டி ஒலி சீரியல் தான். அந்த சீரியலில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான பாடலான அம்மி அம்மி அம்மி மிதித்து பாடலுக்கு இவர்தான் நடனமாடி இருப்பார்.

அதே சமயம் சன் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம் மற்றும் கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில் அவரின் கணவர் மற்றும் மகன் மகளுடன் எடுத்துக் கொண்டால் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.