நயன்தாரா வாடகை தாய் மூலம்….. குழந்தை பெற்றுக் கொள்ள என்ன காரணம் தெரியுமா?…. முக்கிய பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்….!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தங்கள் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தனர்.

இதுவரை இரண்டு முறை ஹனிமூன் சென்றுள்ள இவர்கள் அண்மையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை முன்னிட்டு நாத்தனார் மற்றும் மாமியார் என குடும்பத்துடன் துபாய் சென்று இருந்தால் நயன்தாரா. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வளம் வந்தது. இந்நிலையில் அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.

திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இப்படி கூறுகிறார்கள் என முதலில் அதிர்ச்சி அடைந்த பின்பு ரசிகர்கள் பின்னர் தெளிவாகினர்.அதாவது கடந்த நவம்பர் மாதமே இருவரும் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் மறுபக்கம் வாடகைத்தாய் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை பற்றி பயில்வான் தற்போது கூறியுள்ளார். அதாவது ஏற்கனவே நான் ஏழு மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தது தற்போது உண்மையாகி விட்டது.நயன்தாராவுக்கு 40 வயதாகி உள்ள நிலையில் உடலில் சில பிரச்சனை இருப்பதால் மருத்துவரின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினேன்.

அதனைப் போலவே குழந்தை பெற்றுக் கொண்டால் வாய்ப்பு குறையும் என்றும் உடலில் வயதான தோற்றம் வந்துவிடும் என்ற பயத்தில் தான் இருந்துள்ளார்.அதனால்தான் நயன்தாராவால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று தான் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தையை பெற்றுக் கொண்டு உள்ளார் என பயில்வான் தற்போது கூறி இருப்பது சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.