தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தங்கள் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இப்படி கூறுகிறார்கள் என முதலில் அதிர்ச்சி அடைந்த பின்பு ரசிகர்கள் பின்னர் தெளிவாகினர்.அதாவது கடந்த நவம்பர் மாதமே இருவரும் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் மறுபக்கம் வாடகைத்தாய் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.இந்நிலையில் பல பிரபலங்கள் நயன்தாராவுக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வரும் ரேஷ்மா தற்போது நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில்,இந்த உலகில் அடுத்தவர்களுக்காக சந்தோஷப்படுவது இல்லை, விலாசுவது,யோகிப்பது மற்றும் குற்றம் சாட்டுவது அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பம் காண்பது,இதுதான் தற்போதைய கொடூர உலகில் நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேஷ்மா யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இந்த பதிவை போட்டு உள்ள நிலையில் அவர் நயன்தாரா பற்றி பேசியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து இந்த பதிவை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் ரேஷ்மாவின் பதிவுக்கு மிகச்சரியான தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு வனிதா ஒரு பதிவு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
