அடடே… நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி இவங்கதானா?…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர். இவர் முதன் முதலில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம் மற்றும் சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

அந்தத் திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தன. இதுவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சாயாதேவியை சரத்குமார் விவாகரத்து பெற்று பிரிந்தார். அவருடன் விவாகரத்து செய்த அந்த வருடமே நடிகை ராதிகாவை காதலித்து மறுமணம் செய்து கொண்டார் சரத்குமார். தற்போது ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார்.இந்நிலையில் சரத்குமாரின் முதல் மனைவியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.