தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார். இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் துணிவு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தாய்லாந்து நாட்டில் தன்னுடைய உலக பைக் பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார் நடிகர் அஜித்.அங்கு மொத்தம் ஆறு நாட்கள் பைக் பயணத்தை அஜித் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
