விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது.

இதனிடையே நாளுக்கு நாள் மாறி மாறி போட்டியாளர்கள் அனைவரும் சண்டையிட்டுக் கொண்டே பிக் பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இருவரும் மாறி மாறி சண்டையிட்டு வரும் நிலையில் நேற்று பாத்திரம் கழுவும் அணியின் கேப்டன் ஜனனி தனது அணியில் இருந்து ஜி பி முத்துவிற்கு பதிலாக ஆயிஷாவை ஸ்வாப் செய்து கொண்டார்.

அதனால் வீட்டிற்கு வெளியே உள்ள கார்டன் ஏரியாவில் நேற்று இரவு முழுவதும் ஜி பி முத்து உறங்கினார்.இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவில் தனலட்சுமிக்கு பதிலாக ஜிபி முத்துவை ஸ்வாப் செய்து கொண்டுள்ளார் ஜனனி. அதனால் தற்போது தனலட்சுமி வீட்டிற்கு வெளியே சென்று உறங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியாக அமர்ந்து தனலட்சுமி அழுத நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.