மேடம்…. சூர்யாவா, கார்த்திகா, யார் பெஸ்ட்?…. நச்சுன்னு பதில் சொன்ன நடிகை லைலா….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் லைலா. இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் இறுதியாக அஜித்தின் திருப்பதி திரைப்படத்தில் நடித்திருந்தார் . அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.

சினிமாவில் இருந்து விலகி கணவர் மற்றும் குழந்தை என இருந்து வந்த லைலா தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். திருமணம் ஆகி குடும்பத்துடன் செட்டிலான பிரபல நடிகைகளும் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய நிலையில் லைலா தற்போது தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே சர்தார் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் சர்தார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை லைலா பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சூர்யாவா,கார்த்திகா என மேடையில் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு லைலா கொடுத்த பதில் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.