எப்படி மேடம்…. இந்த வயசுலையும் இப்படி இருக்கீங்க?….. லண்டனில் ரசிகர்களை மிரள வைத்த குஷ்பூ….!!!!!

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது அவர் தனது விடுமுறையை கழிக்க லண்டன் சென்றுள்ள நிலையில் அங்கு குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தில் குஷ்பூ இன்னும் இளம் வயது நடிகை போல தோற்றத்துடன் இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.