தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் குஷ்பூ சமீபத்தில் சேலை அணிந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்தப் புகைப்படத்தை பார்த்து நபர் ஒருவர் குஷ்பூவை கேவலமான வார்த்தையில் வர்ணித்து கமெண்ட் செய்திருந்தார்.

அதனைப் பார்த்த சீரியல் நடிகை மற்றும் மருத்துவர் ஆன சர்மிளா அந்த நபரின் கமெண்ட்சை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் அவரை திட்டியுள்ளார்.இதனைத் தொடர்ந்து இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன் என அந்த நபர் மன்னிப்பு கேட்ட நிலையில் அந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
How nasty and perverse can people be …. Kindly learn to differ with dignity and decency ????♀️????♀️????♀️
She may differ ideologically .. but madam @khushsundar is a talented actor who has achieved great milestones in indian cinema … pic.twitter.com/VlQTsNtFsQ
— Dr SHARMILA (@DrSharmila15) October 14, 2022