இது என்ன புதிய டுவிஸ்டா இருக்கு?….. 6 வருடங்களுக்கு முன்பே இப்படியா?…. உண்மையை போட்டு உடைத்த நயன் – விக்கி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்து ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி அவ்வப்போது தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இருப்பதாக புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார். அதனைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில்,திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்திருக்க முடியும் என பல கேள்விகளும் எழுந்தது. இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக அரசு இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இதற்காக விசாரணை குழுவும் நியமிக்கப்பட்டது.நயன்தாரா மற்றும் விக்கி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உதவிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நயன் விக்கி இடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விசாரணையின் போது இருவரும் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர். அதாவது தங்களுக்கு ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும்,கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாடகைத்தாய் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர்கள் இந்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஆறு வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்துள்ளதாக நாயன் மற்றும் விக்கி தம்பதியினர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.