தோழியின் வீட்டுக்கு சின்னதா ஒரு விசிட்…. தடபுடலாக காலை விருந்து…. ஹேப்பி மூடில் போட்டோவை பகிர்ந்த சுஹாசினி….!!!

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி. இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. அந்த திரைப்படங்கள் இவரின் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரைத்துறையில் நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.

அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருகிறார். 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். அவருடன் இணைந்து இந்திரா என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் முன்னணி நடிகையாக திகழும் சுகாசினி தனது நெருங்கிய தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் தோழி சுகாசினியை நன்றாக கவனித்த நிலையில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சுகாஷினி மிகுந்த மகிழ்ச்சியுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Suhasini Hasan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@suhasinihasan)

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.