தனது பாய் பிரண்டை கூட்டிக்கொண்டு அம்மாவுடன் அவுட்டிங் சென்ற ஸ்ருதிஹாசன்…. அதுவும் எங்கு தெரியுமா?…. வைரல் வீடியோ….!!!!

உலக நாயகன் என்று புகழ்பெற்ற கமல்ஹாசன் கடந்த 1988 ஆம் ஆண்டு சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர்.இவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வந்தவர்தான் சரிகா. இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

இவர் கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதி கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பெற்றோர் பிரிந்தாலும் மகள்கள் இருவரும் தொடர்ந்து இருவர் மீதும் அன்பு செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது அம்மா மற்றும் காதலருடன் டின்னர் சென்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/R6h5TtXQ1HM