பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை…. அவரே கைப்பட எழுதிய கடிதம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

இந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதை ஆகிவிட்டது.இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒரு செய்தி அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சி செய்தியும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது .அதன்படி தற்போது ஹிந்தி சீரியல் நடிகை வைஷாலி டக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Yeh rishta kya kehlata hai உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த சீரியலில் சஞ்சனா சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். பிக் பாஸ் 14 நிகழ்ச்சிபுகழ் நிஷாந்த் மல்கானியுடன் சேர்ந்து ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் வந்தது தான் வைஷாலியின் கடைசி ப்ராஜெக்ட். இந்நிலையில் இந்த ஊரில் வாழ்ந்து வந்த வைஷாலி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வைஷாலி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.