அடடே…. மறைந்த நடிகர் விசுவின் 3 மகள்களா இது?…. இதுவரை பலரும் பார்க்காத அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்தவர்தான் நடிகர் விசு.தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டு துறைகளிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் மற்றும் தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்தவர்.

இவரின் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன்.முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்த இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு முதல் முதலில் ரஜினியின் தில்லு முல்லு என்ற திரைப்படத்தில் ஹென்றிக்கொடுத்தார்.பின்னர் குடும்பம் ஒரு கதம்பம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.

அந்தத் திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் சம்சாரம் அது மின்சாரம் என்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை சினிமாவிற்கு கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் இறுதியாக தங்கமணி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சீரியல் நடிப்பது, டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போன்ற பணிகளையும் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் சிறுநீரக பிரச்சனையால் உயிரிழந்தார். இந்நிலையில் விசு 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளன. தற்போது மூவருமே திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் விசுவின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.