விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளன.இதில் பெரும்பாலும் நாம் பார்த்த முகங்களை அதிக அளவு கலந்து கொண்டுள்ளனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் பல டாஸ்க் கொடுத்து வருகிறது. அதே சமயம் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை.வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வண்ணம் உள்ளது.

இதனிடையே நேற்று புது வரவாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் குவின்சியிடம் சக போட்டியாளரான அசல் கோளார் அத்துமீறி நடந்து கொண்ட விதம் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. குவின்சியின் கையைப் பிடித்து தடவிக் கொண்டே அசல் நின்று கொண்டிருந்தது பார்ப்பவர்களுக்கு சற்று நெருடலாக இருந்தது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது. அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் அசல் கோளாறை ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்ப வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள்.
This is straight up assault from Asal to Queency. She knock's his hands of at 00:04 seconds, but he still continues to harass Queency. Why these woman molesters are still kept inside? #Biggbosstamil6 pic.twitter.com/0Zu0v2wwkR
— GP.MUTHU ARMY BIGG BOSS (@GPmuthuarmy_1) October 17, 2022