உடல் முடியாத நிலையிலும்…. கடுமையான போட்டியில் பங்கேற்று ரசிகர்களை மிரள வைத்த ஜிபி முத்து…..!!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளன.இதில் பெரும்பாலும் நாம் பார்த்த முகங்களை அதிக அளவு கலந்து கொண்டுள்ளனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் பல டாஸ்க் கொடுத்து வருகிறது. அதே சமயம் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை.வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் தலைவர் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாந்தி, ஜி பி முத்து மற்றும் ஜனனி ஆகிய மூவரும் கடுமையான போட்டியில் கலந்து கொண்டுள்ளணர். அதில் சாந்தி சில நிமிடங்கள் தாக்குப்பிடித்தாலும் போட்டியை விட்டு வெளியேறி விட்டார்.

ஆனால் ஜி பி முத்து மற்றும் ஜனனி இருவரும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.நேற்று ஜிபி முத்துவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட நிலையில் தற்போது போட்டியில் கடுமையாக போட்டியிட்டு வருகிறார். இந்த வீடியோ காண்போரை வியக்க வைத்துள்ளது.