தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் லைலா. இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் இறுதியாக அஜித்தின் திருப்பதி திரைப்படத்தில் நடித்திருந்தார் . அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.

சினிமாவில் இருந்து விலகி கணவர் மற்றும் குழந்தை என இருந்து வந்த லைலா தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். திருமணம் ஆகி குடும்பத்துடன் செட்டிலான பிரபல நடிகைகளும் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய நிலையில் லைலா தற்போது தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் லைலா நடித்து வருகின்றார். இந்நிலையில் கலந்து 2006 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தற்போது லைலா தனது கணவர் மற்றும் மகன்கள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் லைலாவின் மகன்களா இது இப்படி வளர்ந்துட்டாங்களே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
