திருமணத்திற்கு பின்பு கணவனின் முதல் பிறந்த நாளுக்கு…. சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய சீரியல் நடிகை ஸ்ருதி…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளாக கலக்கி கொண்டு இருப்பவர்கள் ஏராளம். அந்த வரிசையில் சின்ன திரையில் நாதஸ்வரம், வாணி ராணி, கல்யாண பரிசு மற்றும் பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல சீடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு சகோதரியாக நடித்து அசத்தியிருந்தார்.

அதன் பிறகு சீரியலில் இருந்து விலகிய இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிஸ்டர் தமிழ்நாடு ரன்னர் அப்பான வெற்றியாளரான அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இந்த வருடம் தொடக்கத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் அப்போதிலிருந்தே இருவரும் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

கோவையை பூர்விகமாகக் கொண்ட அரவிந்த் மற்றும் சுத்தி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் பல புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஸ்ருதி தனது திருமணத்திற்கு பிறகு கணவரின் முதல் பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.