ஹீரோயினியாக அறிமுகமாகும் பிரபல 80ஸ் நடிகையின் மகள்…. அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் எண்பது மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை விஜி சந்திரசேகர்.இவர் கலந்த 1981 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தில் இயக்குனர் பாலு சுந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வந்த இவர் சமீப காலமாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.அதே சமயம் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் சத்யராஜின் மனைவியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கு சுரேகா மற்றும் லவ்லி என்ற இரண்டு மகள்கள் உள்ளன.

இந்நிலையில் இவரின் இளைய மகளான லவ்லின் தற்போது சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்க உள்ள ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் என்ற திரைப்படத்தில் நடிகை விஜிசந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் தற்போது அவரின் மகள் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.