நடிகர் விக்ரமின் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா…. இதுவரை பலரும் பார்த்தீடாத குடும்ப புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம்.ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர். அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவர் எப்போதுமே ரசிகர்களுடன் ஜாலியாக தான் இருப்பார்.எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு மேடையே கலகலத்து விடும்.

தனது ரசிகர்களுடன் சகஜமாக புகைப்படம் எடுத்துக் கொள்வார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் ஏழு வித்தியாசமான கெட்டப்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இப்படத்தில் விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனைப் போலவே விக்ரமுக்கு ஒரு மகளும் உள்ளார்.

அவரின் பெயர் அக்ஷிதா. இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு மனு ரஞ்சித் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு அழகிய மகளும் பிறந்தார். இந்நிலையில் விக்ரமின் மகள் மற்றும் மருமகனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.