தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றது.

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் முற்றிலும் சென்டிமென்ட் கலந்த குடும்ப திரைப்படம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் வெளியாவதாக இருந்த வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ரஞ்சிதமே எனும் ஒலிக்கும் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.ஏற்கனவே வாரிசு படத்தில் இருந்து பல காட்சிகள் லீக் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது. தற்போது அந்த பாடல் நீக்க பட்டுள்ளது.
