புது வீட்டிலேயே பெரிய பார் கட்டிய பிரபல தமிழ் சீரியல் நடிகை…. அதுக்குன்னு இப்படியா?….. வைரலாகும் வீடியோ….!!!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் பிரியா பிரின்ஸ். சென்னையில் பிறந்த இவர் ஜர்னலிசம் படித்துள்ளார்.முதல் முதலில் மீடியாவிற்குள் செய்தி வாசிப்பாளராக நுழைந்த இவர் பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளினியாக வளம் வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்தன.

அதன்படி சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட பல சீரியல்களின் இவர் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அதிலும் குறிப்பாக தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் பார்வதி ரோலில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சீரியலில் மட்டுமல்லாமல் ரஜினியின் 2.0,சூர்யாவின் பசங்க 2 மற்றும் வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.’

இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு 16 வயது ஆகின்றது.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் பிரியா பிரின்ஸ் நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது தன்னுடைய வீட்டில் பார் வைத்திருக்கும் வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சென்னையில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என பல நாட்களாக கனவுடன் இருந்து வந்த நிலையில் அதனை நினைவாகியுள்ளார்.

புது வீட்டைக் கட்டிய பிரியா அதனை வீடியோவாக எடுத்து யூட்யூபில் வெளியிட்டுள்ள நிலையில் அவர் தன்னுடைய வீட்டில் ஒரு பார் செட்டப்பையும் வைத்துள்ளார்.இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.