அடடே…. பிக்பாஸ் அசீமிக்கு இவ்வளவு க்யூட்டான மகனா?…. நம்ம கண்ணே பட்ரும் போலயே…. இதோ பாருங்க…..!!!!

விஜய் டிவியில் நுழைந்த பலரும் தற்போது ரசிகர்கள் அறியும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அசீம். அந்த சீரியலில் இவருக்கு ஷிவானி ஜோடியாக நடித்திருந்தார்.பின்னர் இருவரும் கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் மீண்டும் நடிக்க சில எபிசோடுகளுக்கு பின்னர் அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது.

 

இவ்வாறு பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த அசீம், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ் கொன்று போட்டியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. அப்போது அசீம் தனது மனைவி மற்றும் குழந்தை பற்றி பேசினார்.

 

அதாவது தனது மனைவியும் அவரும் சினிமாவில் இருக்கிறோம் என தெரிந்து கொண்டு தான் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக என கூறும் போது மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவரை கதை சொல்லாமல் நிறுத்தி விட்டார்கள். இந்நிலையில் அவரின் மனைவி பற்றிய சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அவரின் குழந்தையின் புகைப்படம்  தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.