தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட. எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசங்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான்.

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இரண்டு மாதங்களாக இப்பபடத்தின் ப்ரோமோஷன் வேலைகளை கூல் சுரேஷ் தீவிரமாக செய்து வந்தார். எந்த ஒரு படம் வந்தாலும் அல்லது எந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றாலும் அதில் முதலில் வெந்து தணிந்தது காடு படத்தை வைத்து அளவு பஞ்ச் வசனம் பேசியுள்ளார்.

அண்மையில் நடிகர் கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் வெளியான போது அதனை பார்க்க வந்த கூல் சுரேஷ், “வெந்து தணிந்தது காடு விருமனுக்கு வணக்கத்தை போடு” என்று பஞ்ச் வசனம் பேசினார். இந்நிலையில் இனிமேல் வெந்து தணிந்தது காடு வசனத்தை பேச மாட்டேன் என அவர் கூறியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.