செம க்யூட்…. தந்தையுடன் சேர்ந்து அந்த பாடலை…. அழகாக பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணன்…..!!!!

சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை தனது பத்தாவது வயதில் பெற்ற பாடகி தான் உத்ரா உன்னி கிருஷ்ணன். இவர் ஒரு இந்திய திரைப்பட பின்னணி பாடகர்.கடந்த 2015 ஆம் ஆண்டு சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றார். அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் தமிழ் திரைப்படத்தில் இவர் பாடிய அழகு பாடலுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 8 .

சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை தனது பத்தாவது வயதில் பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன் இந்த விருதை பெற்ற இளம் பாடகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.கர்நாடக இசை பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் பரதநாட்டிய கலைஞர் பிரியா உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் மகள் தான் இவர்.இவரின் தந்தை உன்னி கிருஷ்ணன் பலமுறை சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை வாங்கியுள்ளார்.

தனது ஆறாவது வயதில் சுதா ராஜா என்ற ஆசிரியரிடம்கர்நாடக இசைப் பயிற்சியை தொடங்கிய உத்ரா உன்னிகிருஷ்ணன் தமிழிசை மட்டுமல்லாமல் மேல்நாட்டு இசை பயில்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் இவர் அழகே அழகே பாடலை மிக அழகாக பாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.