விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்க முடியாமல் தனது தம்பியை ஏதாவது செய்து வெளியே கொண்டு சென்று விடு என ஜிபி முத்து கெஞ்சுகின்றார். நிகழ்ச்சியில் அவர் முழு ஈடுபாடுடன் இருக்கவில்லை. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ஓட்டில் நடைபெற்று வருகின்றது.

போட்டியாளர்கள் வெளியே இவரை தான் அனுப்ப வேண்டும் என நாமினேட் செய்துவிட்டனர்.மக்களும் தங்களது பிடித்த போட்டியாளர்களுக்கு தினமும் ஓட்டு செய்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி நடன கலைஞர் சாந்தி அவர்கள் தான் குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் உள்ளார். அவருக்கு முந்தைய இடத்தில் மகேஸ்வரி உள்ள நிலையில் இதில் யார் வெளியேறப் போகிறார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
