விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் தற்போது ஜிபி முத்துவுக்கு தான் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். தற்போது நம்பர் ஒன் போட்டியாளராக இவர் தான் இடம் பெற்றுள்ளார்.பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து அப்பாவி தனமாக செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். தன்னை வெளியில் அனுப்பி விடும்படி ஜி பி முத்து கடந்த இரண்டு நாட்களாக கதறி வரும் நிலையில் அவரை பிக் பாஸ் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

என்னை உடனே வெளியில் அனுப்புங்க எனக்கு மூச்சு முட்டுகிறது, இனிமேலும் என்னால் இங்கே இருக்க முடியாது, என்னை வெளியில் அனுப்பவில்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன், என்னுடைய தம்பியை வர சொல்லுங்க நான் உடனே பேசணும் என ஜிபி முத்து எச்சரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
