சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகை ஆன ரட்சிதா மகாலட்சுமி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். அவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மைக்காலமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததாக இணையத்தில் தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார் ரட்சிதா தனது கணவர் பற்றி ஏதாவது பேசுவார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் தனது கணவர் குறித்து எதுவும் பேசவில்லை. பிக் பாஸ் ஓப்பனிங் விழாவில் தன் அப்பா மற்றும் அம்மா குடும்பம் பற்றி மட்டுமே பேசி இருந்தார். தனது கணவர் தினேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. இதன் மூலம் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெறுவது உறுதி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் பேசிய ரட்சிதா, பெற்றோர்கள் அனைவரும் தாங்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் தங்களின் பிள்ளைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள். பிறகு பிள்ளைகள் அனைவரும் வளர்ந்து திருமணம் முடிந்த பின்னர் தங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் பிள்ளைகளிடம் கேட்கலாமா வேண்டாமா என தயக்கத்தில் அதனை வேண்டாம் என அப்படியே விட்டு விடுகிறார்கள்.

பிள்ளைகளுக்கும் சில கட்டுப்பாடுகளால் தங்களின் பெற்றோருக்கு எதுவும் கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது. இதனால் அனைவருக்குமே சங்கடம்தான் . இதனால்தான் நான் என் பெற்றோர்களிடம் நீங்கள் சேர்க்கும் காசு உங்களுடையது. நான் எப்படி ஒரு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும் கூட என்னை நானே பார்த்துக்கொள்கிறேன்.

உங்களின் பணத்தை எதற்காகவும் எனக்காக நீங்கள் செலவு செய்யக்கூடாது என கூறிவிட்டேன் என ரச்சிதா கூறியுள்ளார். பெற்றோர்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுக்காமல் நாமே அனைத்தையும் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் சுமையை குறைக்கும் என ரட்சிதாவின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.