தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார்.. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தெய்வமகள் என்ற சீரியலில் சத்திய பிரியா வேடத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை சொந்தமாக்கியுள்ளார். தற்போது இவர் பத்து படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்துள்ள நிலையில் சமீபத்தில் அருண் விஜயுடன் நடித்திருந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி இருந்தது.

அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அவ்வபோது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.அவ்வகையில் தற்போது அழகான சேலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
