நடிகை பார்வதியின் வீட்டில் திருட்டுப் போன பொருள்…. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் குறித்த அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் பார்வதி நாயர் வசித்து வரும் நிலையில் அவரின் வீட்டில் ஆறு லட்சம் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள் திருட்டுப் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாமல் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ள நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தற்போது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.