அடடே நடிகை ராஷ்மிகா மந்தனாவா இது?…. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஆள் எப்படி இருக்காங்க பாருங்க…. அடையாளமே தெரியல…..!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவ்வகையில் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

சினிமாவில் முதன்முதலாக கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமான ராஷ்மிகாவின் அன்சீன் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தனது தோழிகளுடன் ராஸ்மிகா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.