குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம்…. வைரமுத்துவிற்கு வாழ்த்து சொன்ன நபர்…. ஒரே பதிவில் பதிலடி கொடுத்த பாடகி சின்மயி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வளம் வருபவர் சின்மயி. ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். அவரின் முதல் பாடலே ஹிட்டான நிலையில் அவரின் அடுத்தடுத்து பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 96 என்ற படத்தில் இவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது.

இப்படி பல புகழுக்குரிய இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடிகர் ராகுல் என்பவரை காதலித்து வந்தார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ராகுலும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.ஆனால் இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றி பெறவில்லை. 2018 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

குடும்ப வாழ்க்கையில் ராகுல் மற்றும் சின்மயி தம்பதியினருக்கு திருமணம் ஆகி 8 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 37 வயதாகும் சின்மயி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதனிடையே சின்மயி கர்ப்ப கால புகைப்படங்கள் எதையும் முன்னதாக பகிராத காரணத்தால் அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் என பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் தற்போது அதற்கு சின்மயி விளக்கம் அளித்துள்ளார். அதாவது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சமீபத்தில் தனது குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படம் ஒன்றை சின்மயி பதிவிட்டு இருந்தார். இதனைக் கண்ட நபர் வைரமுத்துவிற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்ட நிலையில் சின்மயி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.