விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நாளைக்கு நாள் சண்டைகள் தொடர்ந்து வெடித்து வருகின்றன.நாற்பதாவது நாளில் நடக்க வேண்டியது எல்லாம் இப்போது நடக்கிறது என கடந்த வாரம் கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்த நிலையில் நாளுக்கு நாள் சண்டை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.இந்நிலையில் இன்று முதல் ப்ரோமோவில் ஆயிஷாவை டி போட்டு அசின் கூப்பிட்டதால் பெரும் சண்டை ஏற்பட்டது.

அந்த சண்டை ஓய்ந்துள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே அடுத்த சண்டையை அசீம் ஏற்படுத்தி விட்டார்.விக்ரமனை வீணாகப் போய் வம்பு இழுத்த அவர் வாடா போடா என அவரை அழைக்க ஒரு கட்டத்தில் சண்டை சூடு பிடிக்க தொடங்கியது. அதன் பிறகு விக்ரமன் அணிந்திருந்த வெள்ளை சட்டையை பார்த்து நீ என்ன பெரிய அரசியல்வாதியா என கூற கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விக்ரமன் சண்டை போட்டார். இதனால் வீட்டில் பெரிய கலவரமே வெடித்துள்ளது.
#Day12 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/LtjwX1zi7i
— Vijay Television (@vijaytelevision) October 21, 2022